பாரிஸ் மனிதசங்கிலிப் போராட்டம் : 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பாரிஸ் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் 4000 இற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு தாயகத்தில் அல்லலுறும் தம் உறவுகளுக்குத் தமது நேசக்கரத்தை நீட்டியுள்ளனர்.
மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இம்மனித சங்கிலிப் போராட்டம் மாலை 6.30 மணிவரை இடம்பெற்றது. தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகமாக உள்ள லாச்சப்பலின் பிரதான வீதியான போர் வூர்க் செந்தனி வீதியின் இரு மருங்கிலும் மக்கள் அணிதிரண்டு நின்றனர்.
சகல வர்த்தக நிறுவனங்களும் மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணிவரை தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு இந்தப் போராட்டத்தில் கைகோர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment