கொட்டாஞ்சேனையில் தமிழ் யுவதி கடத்தல்
கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் தேவஸ்தான குடிமனையில் தங்கியிருந்த தமிழ் யுவதி ஒருவர் வெள்ளை வானில் வந்த 6 பேர் கொண்ட குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காமகோடிகா தாமோதர ஐயர் (22வயது) என்ற யுவதியே இவ்வாறு இனந் தெரியாத
நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலும் மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளரான மனோ கணேசன் எம்.பி.யிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளதாவது:
கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் காமகோடிகாவின் தந்தை குருக்களாக பணியாற்றுகிறார். சம்பவதினம் குருக்களுக்கான குடிமனையின் அறையில் தனது சகோதரியுடன் இவர் தங்கியிருந்துள்ளார்.
அப்போது வெள்ளை நிற வானில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆயுத முனையில் மிரட்டிவிட்டு, அறைக்கதவை தட்டியுள்ளனர்.
இருந்தபோதும் சகோதரிகள் இருவரும் கதவை திறக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் தாம் பொலிஸார் எனக்கூறி கதவைத் திறக்கும்படி செய்த இனந்தெரியாத நபர்கள், இருவரிடமும் விசாரணை நடத்திய பின்னர் காமகோடிகாவை கடத்திச் சென்றுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment