நாய் கொள்ளையில் ஈடுபட்ட களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத் தலைவர் இன்று அதிகாலையில் கைது (படங்கள்)
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டலொன்றுக்குச் சொந்தமான நாய் ஒன்றினைக்; கொள்ளையிட முயன்றார்களென்ற சந்தேகத்தின் பேரில் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைத் தலைவரையும் அவரது மெய்ப்பாதுகாப்பாளர்களான பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரையும் காத்தான்குடிப் பொலிஸார் இன்று (17) அதிகாலையில் கைதுசெய்தனர்.
இந்த நால்வரும் இன்று அதிகாலையில் கல்லடியில் அமைந்துள்ள பிரிட்ஜ் வியூ ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான டொக்கமன் இன நாயொன்றைக் கொள்ளையிட்டது தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.
களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தலைவரான மேகசுந்தரம் விநோதராஜ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராவார்.
இவர்கள் நால்வரும் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியும் மட்டக்ளப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான எம் சகாப்தீன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது தலா ரூபா 50,000 பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு விசாரணைக்குத் திகதியும் குறிப்பிடப்பட்டது.
கடத்தப்பட்ட நாயையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையுமே படத்தில் காண்கிறீர்கள் (மட்டக்களப்பு மாவட்ட நிருபர்)
(லங்கா ஈ நியூஸ்)
0 விமர்சனங்கள்:
Post a Comment