ராமநாதபுரமும் படையினர் கட்டுப்பாட்டில்
இராணுவத்தின் 57 ஆவது படைப் பிரிவினர் ராமநாதபுரம் பிரதேசத்தை இன்று பிற்பகல் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் 571 மற்றும் 572 ஆவது படைப்பிரிவுகள் இந்தப் பிரதேசத்தை விடுவிப்பதற்காக பலநாட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்தது.
நேற்றிரவு இந்தக் கிராமத்துக்குள் படையினர் நுழைந்தாலும் இன்று சற்று நேரத்துக்கு முன்னரே இந்தக் கிராமம் முழுமையான கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தது.
தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய கேந்திர நிலையங்களில் ஒன்றாக இந்தக்கிராமமும் திகழ்ந்தது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பல இலக்குகள் மீது விமானப் படையினர் பாரிய தாக்குதல்களை இன்று நடத்தியதாக விமானப் படைபேச்சாளர் தெரிவித்தார்
0 விமர்சனங்கள்:
Post a Comment