இலங்கை அரசிற்கு அழுத்தம் எதனையும் இந்தியா கொடுக்காது
இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக் கும் இடையே தற்போது இடம் பெற்று வரும் உக்கிரமான போரை நிறுத்துவதற்கு உடன்படிக்கை ஒன்றை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் எதனையும் இந்தியா கொடுக்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை வெள்ளிக்கிழமை காலை சந்தித்த பின்னர் கொழும்பில் இந்திய தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சிவ்சங்கர் மேனன் இந்திய அரசாங்கத்தின் இந்நிலைப் பாட்டை தெரிவித்துள்ளார்.
புலிகளுடனான போரை நிறுத்துமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகமவிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்க வில்லை.
இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜ தந்திர உறவுகள் நீண்டகால வரலாறு கொண்டவை.
அதன் அடிப்படையில்தான் பேச்சுக்கள் நடைபெறு கின்றன என அந்த நேர்காணலில் சிவ்சங்கர் மேனன் மேலும் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment