விடுதலைப் புலிகள் புதிய பாதுகாப்பு எல்லைகள் அமைப்பு?
இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னேறுவதைத் தடுக்கும் நோக்கில் விடுதலைப் புலிகள் புதிய பாதுகாப்பு எல்லைகளை அமைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரந்தனைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இராணுவத்தினர் அதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியையும் தற்பொழுது ஆனையிறவின் தென்பகுதியையும் கைப்பற்றியுள்ளனர்.
தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தொடர்ந்தும் இராணுவத்தினர் உள்நுழைவதைத் தடுக்கும் நோக்கில் கிளிநொச்சியின் தெற்குப் பகுதியில் திருவையாறு கிழக்கிக்கு மற்றும் இரணைமடு ஆணைக்கட்டிலிருந்து வடபகுதி ஊடாக ஊரியான் வரை விடுதலைப் புலிகள் பாதுகாப்பு எல்லைகளை அமைத்து வருவதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏ-9 வீதிக்குப் சமாதந்தரமாக இந்தப் பாதுகாப்பு எல்லை அமைக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முரசுமோட்டை, கண்டாவளை ஆகியவற்றின் பகுதிகளின் ஊடாகச் செல்லும் இந்தப் பாதுகாப்பு எல்லை ஊரியானில் சென்று முடிவடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் தண்ணியூற்றுப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.






0 விமர்சனங்கள்:
Post a Comment