வன்னி மக்களை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் வன்னியில் இடம்பெயர்ந்து புலிகளின் பகுதிக்குச் சென்றுள்ள மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் வன்னியில் புலிகளின் பகுதியில் வாழும் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கும்படி கோ~ங்கள் எழுப்பப்பட்டன.
கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தும் கோ~ங்கள் எழுப்பப்பட்டன. யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதி, காங்கேசன்துறை வீதி, ஸ்ரான்லி வீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வேம்படி சந்தியை அடைந்ததும் முடிவுற்றது.
ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை வீதியின் இருமருங்கிலும் நின்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. ஊர்வலத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இராணுவ வாகனங்கள் சென்றதையும் அவதானிக்க முடிந்தது. ஆட்டோக்கள் சிலவும் ஊர்வலத்துடன் சென்றன. பட்டாசுக் கொளுத்தி கோலாகலமாக ஊர்வலம் நடைபெற்றமைக் குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment