தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இலங்கையில் தடை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தது.
இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டின் அவசரகாலச் சட்டத்தின் கீழே இந்தத் தடை விதிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அமைச்சரவையில்; விடுத்த கோரிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் உடனடியாகத் தடையை அமுலுக்குக் கொண்டு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவது, ஒத்தாசை வழங்குவது போன்ற செயற்பாடுகள் தடைசெய்யப்படுகின்றன.
தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள மக்களைச் சுதந்திரமாக வெளியேற தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதிக்காவிட்டால் அந்த இயக்கத்தை இலங்கையில் தடை செய்ய நேரிடுமென ஜனாதிபதி கடந்த வருட இறுதியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் 1983,1987,1998 ஆம் ஆண்டுகளிலும்;; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படடிருந்தது குறிப்பிடத்தக்கது
சுமார் 27 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது,






0 விமர்சனங்கள்:
Post a Comment