அநுராதபுரம் சிறைச்சாலை தமிழ்அரசியல் கைதிகள் மீது தாக்குதல்..
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அரசியல் கைதிகள் நேற்று முற்பகல் அதிகாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது நேற்று முந்தினம் அதிகாலை இந்த சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் தப்பியோடினர் பின்னர் அவர்கள் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் இதனையடுத்தே அரசியல் கைதிகள் தாக்கப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் சிறைச்சாலை ஆணையார் வஜிர குணவர்தனவை தொடர்பு கொண்டு கேட்டபோது நேற்று தப்பிச்சென்ற கைதிகள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகள் கேட்டதற்கு அரசியல் கைதிகள் இணங்கவில்லை என்றும் இந்த நிலையிலேயே சிறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment