திருமாவளவனுக்கு ஆதரவாகப் பிரான்சில் தமிழர்கள் போராட்டம்(பட இணைப்பு)
தமிழகத்தில் நேற்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தொல் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பி.ப. 3.30 மணியளவில் பிரான்சில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வசந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் தொல். திருமாவளவனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
'இலங்கைத் தமிழர் வாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் நிகழும் அவலங்கள் யாராலும் தடுத்து நிறுத்தமுடியாத விடயமாக உருவெடுத்துள்ளன. உலகெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வெழுச்சி பெற்று விரக்தியின் விழிம்பில் நின்றுகொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதற்கான ஆதரவையும் நன்றியையும் வெளிப்படுத்துமுகமாக பிரான்சில் தமிழர்கள் அதிகளவில் கூடும்பகுதியான லாச்சப்பல் பகுதியில் தொல்திருமாவளவனின் உருவப்படம் தாங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்று வியாழக்கிழமை பி;.ப 3.30 மணிக்கு ஆரம்பித்து மாலைவரை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தின்போது இலங்கைப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment