புத்தல, ஒக்கம்பிட்டியவில் பலர் வெட்டியும் சுட்டும் கொலை: இன்றிரவு சம்பவம்
மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒக்கம்பிட்டியக் கிராமத்துக்குள் இன்று (18) இரவு திடீரென நுழைந்த ஆயுதாரிகள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரை வெட்டியும் சுட்டும் கொன்றதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படுகாயமடைந்த சிலர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கிராமத்துக்குள் துப்பாக்கிகள், ஆயுதங்கள் சகிதம் திடீரென நுழைந்த சிலரே இவர்களை வெட்டியும் சுட்டும் கொன்றதாக நேரில் சம்பவத்தைக் கண்ட ஒருவர் தெரிவித்ததுடன் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் விடுதலைப் புலிகள் எனத் தாம் நம்புவதாகவும் கூறினார்.
புத்தல பொலிசாரை லங்கா ஈ நியூஸ் சற்று நேரத்துக்கு முன்னர் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய அவர்கள் பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
லங்கா ஈ நியூஸ்
0 விமர்சனங்கள்:
Post a Comment