வன்னி மோதல் பகுதியில் உணவு நெருக்கடி ஜன. 16 இன் பின் லொறிகள் செல்லவில்லை
வன்னியில் உணவு நெருக்கடி தலை தூக்கியிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.மோதல்பகுதியில் சிக்குண்டிருக்கும் இலட்சக்கணக்கான பொதுமக்கள் உணவு நெருக்கடியை எதிர்நோக்குவதாக உலக உணவுத்திட்டத்தின் பேச்சாளர் எமிலா காசெல்லா ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான நிவாரண உதவியிலேயே 2 1/2 இலட்சம் மக்கள் முழுமையாக தங்கியிருப்பதாகவும் ஆனால், ஜனவரி 16 இற்குப் பின்னர் மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்லப்படவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக ஏ.பி.செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
"மனிதாபிமானபாதை'யூடாக உணவு லொறிகள் செல்வதற்காக கடந்த வியாழக்கிழமை காத்திருந்தபோதும் அரச அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதி கிடைக்காததால் போகமுடியவில்லை எனவும் இனி அடுத்த வியாழக்கிழமை வரை காத்திருக்கவேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் மேலும் விநியோகிப்பதற்கான கையிருப்பு தங்களிடம் இல்லையெனவும் தமது பணியாளர்கள் தற்போது ஒளிந்துகொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment