சூசை கொல்லப்பட்டாரா?
புதுக்குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை காலை கடும் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் தங்குமிடம் அழிக்கப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடகிழக்கே சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நிலைகள் மீதே நேற்றுக் காலை "எவ்7' ரக ஜெற் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் புலிகளின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாகவும் தாக்குதல் நடைபெற்ற போது கேணல் சூசை அங்கிருந்ததாகத்தெரிய வருவதால் அவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லையென விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் புலிகள் மத்தியில் பதற்றம் நிலவியதாகவும் நிலத்தைத் தோண்டும் மூன்று வாகனங்கள் அப்பகுதியில் மீட்பு வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பரந்தன் முல்லைத்தீவு வீதிக்குச் சமீபமாக படைநடவடிக்கையில் ஈடுபடும் விஷேட படையணி 2, 3, 4 மற்றும் 59 ஆவது படையணிகள் புதுக்குடியிருப்பை நெருங்கியுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
விஷேட படையணி 2 இன் 8 ஆவது சிங்க ரெஜிமென்ற் வெள்ளிக்கிழமை புலிகளுடன் பலத்த மோதல்களில் ஈடுபட்டிருந்தது. இதுபோன்று பல பகுதிகளில் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளது. இவற்றில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment