வவுனியா வைத்தியசாலையில் உடையார்கட்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான 19 சடலங்கள்
கிளிநொச்சி உடையார்கட்டுப் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 19 பேரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் பெண்கள் என்றும், 12 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு அவர்கள் கொண்டு வரப்படவில்லை. அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் தி்ருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment