விசுவமடு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான 10 பேரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைப்பு
விசுவமடு பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட 10 சடலங்களில் இரண்டு மாத்திரமே, அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 8 சடலங்களும் பெண்களுடையவை என்றும் அவை அடையாளம் காணப்படுவதற்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, உருத்திரபுரம், சி9 என்ற இடத்தை முகவரியாகக் கொண்ட கணேசன் பிரதாபன் (33), கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த சண்முகநாதன் சசிதராஜ் (37) ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டனர். பிரதாபனின் சடலம் உறவினர் ஒருவரும், மற்றைய சடலம் இறந்தவருடன் வந்ததாகத் தெரிவிக்கப்பட்ட ஒருவரும் பொறுப்பேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 29 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment