முல்லைத்தீவு வாவியில் புலிகளின் 3 தாக்குதல் படகுகள் அழிப்பு
முல்லைத்தீவு வாவியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விமானப்படை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் கடற்புலிகளின் மூன்று தாக்குதல் படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவுக்கு வடக்கே உள்ள வாவியிலேயே நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தப் படகுகள் மீது விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கடற்புலிகளின் இரு தாக்குதல் படகுகள் முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், ஒரு படகு அழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதல் முல்லைத்தீவு கடலில் ஜோர்தானிய சரக்குக் கப்பலான பரா ஐஐஐ தரித்து நிற்கும் இடத்திற்கு அருகிலேயே நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4.20 மணியளவில் முல்லைத்தீவு வாய்க்கால் பகுதியிலுள்ள கடற்புலிகளின் மறைவிடம் மீது மிக் விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் கடற்புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment