பொன்னம்பலம் தனியார் மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் நோயாளர் 61பேர் படுகொலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இயங்கி வந்த "மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை" மீது சிறிலங்கா வான்படையின் "மிக்" ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 61 நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வன்னி எங்கும் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 126 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 238 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் உள்ள "மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை" மீது நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குறிவைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியது.
இதில், அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் இருந்த நிலைலேயே மருத்துவமனை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.
இதில் 61 வரையான நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நோயாளர்களில் பெருமளவிலானோர் தமது உறவினர்களின் தொடர்புகளை இழந்து, அவர்களின் தொடர்பிற்காக காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment