ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விடயம்: நிராகரித்தது ரஷ்யா
இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு விளக்கமளிக்கும் மெக்சிக்கோவின் தீர்மானம் ரஷ்யாவின் எதிர்ப்பால் கைவிடப்பட்டதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்த வருடம் உறுப்பினராக இணைந்துகொண்ட மெக்சிகோ, இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக, பாதுகாப்புச் சபையில் உத்தியோக பற்றற்ற விவாதமொன்றை நடத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்தக் கோரிக்கைக்கு பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்ட ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது.
உத்தியோகபற்றற்ற விவாதமான்றுக்கே மெக்சிகோ கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இது கவனத்தில் எடுக்கப்படவில்லையெனவும் கெஇலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
எனினும், நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பலிஹகார, மெக்சிக்கோ பிரதிநிதிகளைச் சந்தித்து, இலங்கையின் நிலைவரம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
“இந்த விடயத்தை தூதுவர் பலிககார கையாழ்வார். இலங்கை விடயம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு வராது என்ற நம்பிக்கை உள்ளது” என வெளிவிவகார அமைச்சின் அதிகாரி கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment