இது புலிகளின் கட்டுக்கதை
புதுக்குடியிருப்பில் புலிகள் நடத்திய ஊடறுப்பு தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பல ரகமோட்டார் எறிகணைகள், இலட்சக்கணக்கான தோட்டாக்கள் ஆகியவற்றை விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாக இணையத்தளங்களில் வெளியான செய்திகளில் எந்த விதமான உண்மையும் இல்லை எனவும் இது புலிகளின் கட்டுக்கதை எனவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக் கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் கோப்பாபுலவு, மன்னாகண்டல் ஆகிய இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான படையினரும் ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருந்தன.
இதனை அறிந்த புலிகள் முதலாம் திகதி அதிகாலை ஊடறுத்து தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் மூன்றாம் திகதி வரை நீடித்தது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த ஊடறுப்பு தாக்குதலால் படையினர் நிலைகுலைந்தனர்.
இத்தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
81 மில்லி மீற்றர் மோட்டார்கள் பல, 120 மில்லி மீற்றர் மோட்டார்கள் பல, 120 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் 2000, 81 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் 8000, ஏ.கே. துப்பாக்கிகள் நூற்றுக்கணக்கில், ஏ.கே.
துப்பாக்கி ரவைகள் ஒரு மில்லியனுக்கு மேல், ஆர்.பி.ஜி. உந்துகணை செலுத்திகள் பல, ஆர்.பி.ஜி. உந்துகணைகள் பல, ஆர்.பி.ஜி. புரொபளர்கள் பல, எல்.எம். ஜி. துப்பாக்கிகள் பல உட்பட பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான வழங்கல்களை மேற்கொண்ட 20 வாகனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன என அந்த இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த செய்திகளை அடியோடு மறுத்த பிரிகேடியர் உதய நாணயக்கார இது புலிகளின் பிரசார நடவடிக்கை என்று கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment