மலேசியாவில் தண்டனையில் இருந்து தப்பிய இரட்டையர்கள்
மலேசியாவில் ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்ட இரட்டையர்களில் எவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் ஒன்று கண்டுபிடிக்க முடியாது போனதால், போதை மருந்து கடத்திய குற்றவாளி ஒருவர் தூக்குக் கயிற்றில் இருந்து தப்பியுள்ளார்.
இந்த வழக்கு முன்னெப்போதும் இல்லாத வகையைச் சேர்ந்தது என்று கூறிய மலேசிய நீதிபதி ஒருவர், அதனால், தன்னால், தவறான நபரை தூக்குமேடைக்கு அனுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிலும், காரிலும் போதை மருந்தை பதுக்கி வைத்திருந்த ஒருவரை மலேசிய பொலிஸார் கைது செய்தனர். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே இடத்துக்கு வந்த அவரைப் போன்று உருவ ஒற்றுமை கொண்ட அவரது இரட்டைச் சகோதரரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இருவரில் எவர் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்று அரச தரப்பு சட்டவாதிகள் நிரூபிக்கத் தவறிவிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி அறிவித்தபோது, இரட்டையர்கள் இருவருமே அங்கு அழுதனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment