புலிகளின் பிடியிலிருந்து தப்பி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 77பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்
அளவுக்கு அதிமான மக்களுடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று வள்ளங்களைப் படையினர் காப்பாற்றியுள்ளனா.; இந்த மூன்று வள்ளங்களிலும் 77 பேர் காணப்பட்டனா.;
இது தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருவதற்காகக் கடற்மார்க்கமாக பயணம் செய்து கொண்டிருக்கும் போது அளவுக்கதிகமான பயணிகள் காரணமாக மூன்று வள்ளங்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தன. இவற்றினை அவதானிதத் கடற்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அனைவரையும் காப்பாற்றியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்கிழக்கு கடற்பரப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் இன்று (16) அதிகாலையின் பின்னரே இடம்பெற்றுள்ளன.
முதலாவது படகிலிருந்து 34 இரண்டாவது படகிலிருந்து 19 பேரும் மூன்றாவது படகிலிருந்து 24 பேருமே இவ்வாறு காப்பாற்றப்பட்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment