அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இடது கைப்பழக்கம் தலைமைத்துவத்தின் அடையாளம்?
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இடது கைப்பழக்கம் அவரது அபிமானிகள் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வருடத்திற்கான இடது கைப்பழக்கமுள்ளவர்களுக்கான விருதுக்கு பராக் ஒபாமா, ஹொலிவூட் திரைப்பட உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையான அஞ்சலா ஜோலி உட்பட ஐவரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 30 வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் 66 சதவீதமானவர்கள் இடது கைப்பழக்கமுடையவர்களாவர். பிந்திய 7 அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜெரால்ட் போல்ட், ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பில் கிளின்டன் உட்பட ஐவர் இடது கைப்பழக்கமுடையவர்கள் ஆவர்.
அரிஸ்டோட்டில், நெப்போலியன், ஜூலியஸ் சீஸர், வின்ஸ்டன் சேர்ச்சில், சார்ளி சப்ளின், மைக்கல் அஞ்சலோ ஆகியோர் இடது கைப்பழக்கமுடைய பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இடது கைப்பழக்கமுள்ளவர்கள் மாபெரும் சாதனையாளர் என்ற நம்பிக்கை தவறான கற்பனை என மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இடது கைப்பழக்கமுள்ளவர்கள், வலது கைப் பழக்கமுள்ளவர்களை விட மிகவும் சுதந்திரமாக செயற்படுவதுடன் விரைவான தீர்மானமெடுத்தல், உயர் மதிநுட்பம், பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக விளங்குவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment