ஸ்டிரெச்சர் உடைந்து விழுந்தது: நின்று போனது இதயத்துடிப்பு
ஸ்டிரெச்சர் உடைந்து விழுந்ததில் இதய நோயாளியின் இதயத்துடிப்பு நின்று போனது. இது தொடர்பாக இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். கேரள மாநிலம் அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம் (50). அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்ட இவரை ஆலப்புழா மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து சென்றனர். இங்கு இவருக்கு நெஞ்சுவலி மேலும் அதிகமானதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினர். இதற்காக ஸ்டிரெச்சர் கொண்டு வரப்பட்டு அதில் அப்துல் சலாம் படுக்க வைக்கப்பட்டார்.
அப்போது ஸ்டிரெச்சர் உடைந்து விழுந்தது. இதில் அப்துல் சலாம் கீழே விழுந்தார். உடனே வேறு ஸ்டிரெச்சர் கொண்டு வரப்பட்டு அதில் அவரை படுக்க வைத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது இதயத்துடிப்பு நின்று போயிருந்தது. இதை கண்டித்து சலாமின் உறவினர்கள் மற்றும் இளைஞர் காங்கிரசார், டி.ஒய்.எப்.ஐ. பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதை தொடர்ந்து ஸ்டிரெச்சர் கொண்டு வந்த இரண்டு தற்காலிக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment