விசுவமடு, குருவிகுளம் தேடுதல்: மோட்டார் குண்டு ஏவும் கருவிகள் கண்டுபிடிப்பு
விடுவிக்கப்பட்ட விசுவமடு மற்றும் குருவிகுளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது புலிகளின் மோட்டார் குண்டு களை ஏவும் இரண்டு கருவிகளை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள் ளதாக இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவிகள் ஒன்றும், 80 மி.மீ. ரக மோட் டார் குண்டுகளை ஏவும் கருவி ஒன்றும் இவற்றில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். படையினர் கடுமையான தாக்குதல்களினால் சேதமடைந்த நிலையில் புலிகள் விட்டுச் சென்றுள்ள இந்த மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளையும் இரா ணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படைப்பிரிவினரே கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இராணுவத்தின் 57வது படைப்பிரிவினர் ராமநாதன்புரம் பகுதியில் நடத்திய பாரிய தேடுதல்களின் போது கைக்குண்டுகள் 26, 152 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 2, 122 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 10, ரி-56 ரக துப்பாக்கிகள் 2 என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர்.
இது தவிர ஒரு இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த பெருந்தொகையான உலர் உணவுகளையும், 7350 லீட்டர் டீசல்களையும் மீட்டெடுத்துள்ளனர். ஒவ்வொன்றும் 210 லீட்டர்களைக் கொண்ட 35 பரல்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதுக்குடியிருப்பு, தாமரக்குளம் பகுதிகளில் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment