கூட்டமைப்பின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும்
தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் இன்று முக்கியமான கட்டம். புலிகள் இயக்கத்தின் தோல்வி நிதர்சனமாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் வன்னிப் பெரு நிலப் பரப்பு முழுவதும் அரச படையின ரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். புலி களின் தோல்வியைத் தனிநாட்டுக் கோரி க்கையின் தோல்வியாகவே பார்க்க வேண் டும்.
தனிநாடு சாத்தியமில்லை என்பது ஏற்க னவே தெரிந்த விடயம். பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எடுத்துக்கூறிய போதிலும் புலிகள் ஏற்கவில்லை. ஆயுதம் ஏந்திப் போராட முன்வந்த அமைப்புக ளில் புலிகள் மாத்திரம் யதார்த்தத்தை ஏற்காமல் தனிநாட்டுக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இதன் விளைவாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்ச நஞ்சம ல்ல.
ஆயுதப் போராட்டத்தின் விளைவாகப் புதுப்புதுப் பாதுகாப்பு வலயங்கள் வட க்கு, கிழக்கு மாகாணங்களில் பிரகடன ப்படுத்தப்பட்டன. பாதுகாப்பு வலயப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம் பெயர நேர்ந்தது. இவ்வாறு இடம்பெ யர்ந்த மக்கள் தங்கள் வழமையான வாழ்வாதாரங்களை இழந்ததால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். சிலர் அகதி முகாம்களிலேயே வாழ்க்கையைக் கழிக் கும் நிலை உருவாகியது. மக்களின் பெரு ந்தொகையான சொத்துகள் அழிவுக்கு உள்ளாகின. ஏராளம் உயிரிழப்புகள் இடம்பெற்றன. அரசியல் தீர்வு முயற்சி வெகுவாகப் பின்தள்ளப்பட்டது.
இவ்வளவு பாதிப்புகளுக்குமான தார் மீகப் பொறுப்பிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது. புலிக ளோடு சேர்ந்து இவர்களும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான பொறு ப்பை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
சில அரசியல் கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இக்கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண் டிருப்பதாகக் கூறுபவை. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இத்தலை வர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் நலனுக்குக் குந்தகமான விளைவை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவ ர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டதற்கு வெவ்வேறு காரணங் கள் உண்டு. புலிகளின் அரசியலை மனப்பூர்வமாக ஏற்றுச் செயற்பட்டவ ர்களும் இவர்களுள் இல்லாமலில்லை. புலிகளால் தங்களுக்கு உயிராபத்து ஏற்ப டலாம் என்ற அச்சம் காரணமாக அந்த வழியில் சென்றவர்கள் சிலர். தேர்தல் வெற்றிக்குப் புலிகளின் ஆயுத பலத்தில் நம்பிக்கை வைத்து அவர்களின் வழியில் சென்றவர்கள் வேறு சிலர்.
புலிகள் தோல்வி அடைந்திருக்கும் இன் றைய நிலையில், மக்களின் நலனுக்காகச் செயற்படுவதா அல்லது அரசியலிலி ருந்து மறைந்துவிடுவதா என்பதே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலை வர்களுக்கு முன்னாலுள்ள கேள்வி. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது தான் மக்களின் நலனுக்கான செயற் பாடு.
தமிழ் மக்களின் விமோசனத்துக்கு அர சியல் தீர்வைத் தவிர வேறு வழி இல்லை. தமிழ்த் தலைவர்கள் அரசி யலில் நிலைத்திருப்பதற்கு அரசியல் தீர்வு முயற்சியில் பங்காளிகளாகுவதைத் தவிர வேறு வழி இல்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment