அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குடாநாடு விஜயம்
யாழ் குடாநாட்டுக்குச் சென்றிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அவசர வைத்திய நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக குடாநாடு சென்றிருக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி அதிகாரி ஜேம்ஸ் மூர் மற்றும் தூதரகத்தின் அரசியல் விவகாரப் பிரிவின் அதிகாரி மெக் டெடர் ஆகியோர் நேற்றுமாலை ஆயரில்லத்துக்குச் சென்று கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் உதயன் பத்திரிகை நிறுவனத்தையும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பண்யை சுகாதார கிராமத்தில் இன்று புதன்கிழமை அவசர வைத்திய நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கலந்துகொள்ளவிருந்தார்.
எனினும், நேற்றையதினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவர் குடாநாடு செல்லவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment