புலிகள் ஜனநாயகப்பாதைக்குத் திரும்ப வேண்டும்
வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை கேடயங்களாக்காமல் ஆயுதங்களைக் கைவிட்டு, புலிகள் ஜனநாயகப்பாதைக்குத் திரும்ப வேண்டும். – கிழக்கு முதல்வர் - சந்திரகாந்தன்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தற்போது இறுதிக் கட்டத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அதிகளவான பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ள புலிகள் இனியும் வீராப்புப்பேசி வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களை பணயக் கேடயங்களாக்காமல் ஆயுங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவேண்டும். இதுவே அவர்கள் தமிழ் மக்கள்மீது பற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகும்.
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவுடன் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காணும் பொருட்டு புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். ஆனாலும் புலிகள் அதனை அரசின் பலவீனமாகக் கருதி பேச்சு வார்த்தையினை திட்டமிட்டு சீர்குலைத்ததுடன் அரசியல் தலைவர்கள், படைவீரர்கள், பொதுமக்கள்மீது தாக்குதல்களைக்; கட்டவிழ்த்துவிட்;டதுடன், சகோதரத்துவ முரண்பாட்டிற்கும் முயற்சித்தனர். இந்நிலையில்த்தான் நாட்டின் இறைமையினைப்பாதுகாத்து, சகோதரத்துவத்தினைக் கட்டியெழுப்ப பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் பிரகடணப் படுத்தப்பட்டு, முதலில் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு, தற்போது வடபகுதியும் முழுமையாக மீட்கப்படும் நிலையில் உள்ளது.
இவ்வாறான நிலையில் வன்னியில் குறுகிய நிலப் பரப்பிற்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகள் அப்பகுதியில் உள்ள அப்பாவிப் பொது மக்களின் உயிர்களைப் பணயமாக்காமல் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்;டிருக்கும் மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் அம் மக்களைச் செல்ல அனுமதிக்க வேண்டும். மக்களுக்காகப் போராடுவதாகக்கூறும் புலிகள் அம் மக்களுக்காகச் செய்யும் குறைந்த பட்சஉதவி இதுவாகும். இனியும் பயங்கரவாத நடவடிக்ககைளுக்கு இடமில்லை என்பதனைப் புரிந்து கொண்டு எம்மையும் கிழக்கு மாகாணத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு, ஆயதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதே புலிகளுக்குள்ள ஓர் இறுதிவழியாகும். அத்தோடு ஜனாதிபதி அவர்கள், புலிகளை ஆயுதங்;களைக் கைவிட்டு விட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதற்கு கொடுத்துள்ள சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment