இது ஒரு சங்கமம்
சாகும்வரை நான்கு நாட்கள் உண்ணாவிரதம் என்ற திருமாவளவனின்
நகைச்சுவைக்காட்சி முடிந்தது. தமிழகமே ஸ்தம்பிக்கிற போராட்டம் நடத்தியே
ஆகவேண்டும் என்று கூறி அது இல்லாவிட்டால் வேறு வேறு போராட்டம் நடத்
தலாம் என்று ராமதாஸ் நழுவிய – சர்க்கஸ் பல்டி முடிந்தது. தமிழர்கள் எல்
லாரும் உயிரையும் விடத் தயாராக வேண்டும் என்ற தமிழகத்தையும வைக்
கிற அறைகூவலை விடுத்த தா.பாண்டியனின்-திகில் காட்சியும் முடிந்தது.
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்ட இந்தக் கூத்துக்
களை மிஞ்சுகிற மாதிரி தனது தமிழினத் தலைமையை நிலைநாட்டுகிற
வகையில் கலைஞர் ஏதாவது செய்யவேண்டாமா? செய்தார். இன்றே போர்
நிறுத்தம் - அதைத் தொடர்ந்து அமைதி என்ற தீர்மானத்தை அவர் சட்
டசபையில் நிறைவேற்றிக் கொண்டார்.
இன்றே போர்நிறுத்தம்…. என்ற தீர்மானம் ஜனவரி 23ம் திகதி நிறைவேறியது
இந்த இதழ் வெளியாகிறபோது இன்றே தீர்மானம்- இறுதிவேண்டுகோள் - வந்
து ஒரு வாரம் ஆகியிருக்கும்.
சரி இன்றே தீர்மானம் பலன் அளிக்கவில்லை எனும்போது முதல்வர் என்ன
செய்வார்? ஒருவேளை பதவியை ராஜினாமா செய்து விடுவாரோ? அல்லது மத்
திய அரசுக்கு அளித்து வருகிற ஆதரவை வாபஸ் வாங்கி மத்திய
அரசைக் கவிழ்த்து விடுவாரோ? அஞ்சேல்! கவலைப்படேல் “இன்றே” தீர்மானம்
, பலன் அளிக்கவில்லை என்றால் -அடுத்து என்ன என்பதையும் சட்
டசபையிலேயே முதல்வர் கூறிவிட்டார். இறுதி எச்சரிக்கையான “இன்றே தீர்
மானம் பலனளிக்கவில்லை என்றால் - தி மு க. பொதுக்குழு செயற்குழு கூடி
விவாதித்து அறிவிப்பு வரும்.
எப்படி? இதைவிட இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு தியாகத்தை யாரால்
செய்ய முடியும்? இந்தத் தமா~; போதாதென்று, முதல்வர் இன்னொரு சிரிப்பு
வெடியையும் உதிர்த்தார். “நாங்கள் ஆட்சியை இழந்தால், அடுத்தநாளே தமிழ்
ஈழம் மலரும் என்றால் - அதற்கும் தயார் என்றார்.
இது எப்படி?
நாளையே தமிழ் ஈழம் மலர வேண்டும் - நாளை மறுநாள் மலர்ந்தாலும் நோ
யூஸ்! நூளை ஈழம் என்றால், இன்று ஆட்சியை இழக்கத் தயார். நாளையே
ஈழம் மலரச் செய்யப்போவது யார்? இந்த நிபந்தனை நிறைவேறுவதாக இருந்
தால்தான் ஆட்சி இழப்பு. இல்லாவிட்டால் ஆட்சி தொடரும். இந்த நிலையில்,
பொதுக்குழு விவாதித்து, என்ன கிழிக்கும்? ஆட்சி தொடரும்;: மத்திய ஆட்
சியிலும் பங்கு தொடரும்: அந்த ஆட்சியில் சம்பந்தம் இல்லாதது போல,
உறுதியான வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை… எல்லாம் வரும்.
இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் - அவர்
களைக் கேடயங்களாகப் பயன்டுத்துகிற விடுதலைப்புலிகள், அவர்
களைத் தங்கள் பிடியிலிருந்து விடுவித்து, பாதுகாப்பான இடங்களுக்
குச் செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும்’ என்று அல்லவா இவர்
கள் கோரியிருப்பார்கள்?
அதைச்செய்யாமல் மத்திய அரசுக்குத் தந்தி, கடிதம், கோரிக்கை, தீhமானம்
… என்றெல்லாம் தமா~; காட்டுவது, ஏமாற்று வேலை அல்லவா? அப்படியே
மத்திய அரசைக் கோருவதுதான் வழி என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்
கொண்டால் கூட – மத்திய ஆடசியில் தி மு க வும் தானே இருக்கிறது.?
மத்திய அமைச்சரவையின் கொள்கைச் செயல்பாட்டுக் குழுவில் கொள்கைச்
செயல்பாட்டுக்குழுவில், தி மு க அமைச்சரும் இருக்கிறாரே? ஆங்கு கேட்
பதை விட்டுவிட்டு,
இங்கே வந்து, ‘இன்றே… இப்போதே என்று தீர்மானம் போடுவதில் என்ன
அர்த்தம்? என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது தமிழர்களின் உணர்வுகளை ஈர்
க்கிற தீர்மானத்திற்குக் கற்பிக்கிற களங்கம்!
தி மு க நாடகம் நடத்துவதாக, அ தி மு க. வின் பன்னீர்செல்வம் குறிப்பிட்
டார். அது தவறு. அவர்கள் நாடகம் நடத்தவில்லை, சங்கமம் நடத்துகிறார்
கள். இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை வைத்து – திருமாவளவனின்
நகைச்சுவை: ராமதாஸின் சர்க்கஸ் பல்டி: தா.பாண்டியனின் திகில் நடனம்:
கலைஞரின் கண்ணீர்க்காட்சி – எல்லாம் சேர்ந்த பொழுது போக்குச் சங்கமம்
இது.
துக்ளக்
0 விமர்சனங்கள்:
Post a Comment