புதுமையான வைத்தியம்
3 பேராக வந்தால் தான் நாய்க்கடிக்கு ஊசி
அரசு ஆஸ்பத்திரியில் நாய்க்கடி ஊசிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெற முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் சென்றனர். முதலில் சென்ற 3 பேருக்கு நாய்க்கடிக்கு ஊசி போடப் பட்டது. 4 வதாக சின்னாளபட்டி அருகேயுள்ள தொப்பம் பட்டியை சேர்ந்த சிறுமி சென்றார். அவருக்கு ஊசி போட ஊழியர்கள் மறுத்து விட்டனர். புதிய பாட்டிலை திறந்தால் மூன்று பேருக்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் இன்னும் 2 பேர் வரும்வரை காத்திருக்குமாறு ஊழியர்கள் கூறினர். நீண்ட நேரம் காத்திருந்த சிறுமி தலைச் சுற்றல் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அவரின் பெற்றோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment