இலங்கை பற்றி அமெரிக்கா, பிரித்தானியா அக்கறை
இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து ஐக்கிய அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்டும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வொஷிங்டனிலுள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் மோசமடைந்திருக்கும் மனித உரிமை நிலைமைகள் குறித்து இராஜங்கச் செயலாளரும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் விரிவாகக் கலந்துரையாடியிருந்ததாக இருவரும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இலங்கையித் தொடர்ந்துவரும்; இனப்பிரச்சினைக்கு அரசியல் தீPர்வொன்றே முன்வைக்கப்பட வேண்டும் எனவும், அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான காலம் தோன்றியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வொன்றை முன்வைவப்பதற்கு டோக்கியோ இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து இரு நாடுகளும் உதவிவழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும்; இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் தற்காலிக மோதல்தவிர்ப்பொன்றை கடைப்பிடித்து, மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டுமென இராஜங்கச் செயலாளர் கிளின்டனும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மிலிபான்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் இணைத்தலைமை நாடுகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையைத் தாம் வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment