உலகத் தமிழர்களின்காதில் பூ சுற்றிவிட்டது திமுக
இலங்கைத் தமிழர் பிரச்னையில் உலகத் தமிழர் ஒவ் வொருவரின் காதிலும் பூ சுற்றி விட்டது திமுகவின் செயற்குழு முடிவு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்தார்
வேலூரில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசை நடத்தி வரும் கருணாநிதி ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதியாக விளங்குவ தால், அவருடைய கட்சி இலங்கைத் தமிழர் பிரச்னை யில் எடுக்கும் முடிவால் தீர்வு ஏற்படும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் இந்த எதிர்பார்ப்பையும், ஏக்கத் தையும் நிறைவு செய்யும் வகையில் திமுக செயற்குழு வின் முடிவு இல்லை
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்களாம், இதன் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டம், பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் இதையெல்லாம் நடத்தி இலங்கை அரசுக்கும், மத் திய அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பயணத்தை தொடங்கப் போகிறார்களாம்
இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரின் காதிலும் பூ சுற்றியுள்ளனர். இந்த முடிவின் மூலம் இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் திமுக 50 ஆண் டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளது
1958 ஜூன் 22-ல் திமுக பொதுச் செயலராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், இலங்கைத் தமிழர் உரிமை பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று திராவிடநாடு பத்திரிகையில் தெரிவித்துள்ளார்
1958-ல் இலங்கைத் தமிழர் உரிமை பாதுகாப்பு என்றார்கள், 2009-ல் இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை என்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. அதே நிலையை இன்றைக்கும் மேற் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் வெட்கப்படப் போவ தில்லை, வெட்கமும் இல்லை. அவர்களின் தீர்மானத் தைப் பார்த்து தமிழர்கள்தான் வெட்கப்படுகிறார் கள், வேதனைப்படுகிறார்கள்
போர்நிறுத்த கோரிக்கையை வலியுறுத்தி 3 முறை சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது அந்த கோரிக்கையை திமுக கைக ழுவிவிட்டது. போர்நிறுத்தம் குறித்து செயற்குழுவில் ஒரு வார்த்தை கூட வலியுறுத்த வில்லை
வடக்குப் பகுதி, கிழக்குப் பகு திக்கு சுயாட்சி, முழுமையான அதி காரப்பகிர்வு உள்ள அரசியல் தீர்வு உருவாக்கி செயல்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற முடிவை வலியுறுத்தி பேரணி நடத்த திமுக செயற்குழு முடிவு செய்துள்ளது
போர்நிறுத்தம் இல்லாமல் எப்படி பேச்சு வார்த்தை தொடங்க முடியும், அமைதி ஏற்படும், அதிகார பகிர்வு ஏற்படும். இது ராஜபட்ச கட்சியின் தீர்மானம் போல் உள்ளது. இவையெல்லாம் கருணா நிதிக்கே வெளிச்சம். மொத்தத்தில் அன்றாடம் செத்து மடியும் இலங்கைத் தமிழர்களை திமுகவும், ஆளும் திமுக அரசும் கைவிட்டுவிட்டன. தமிழர்கள் நிர்கதியாக விடப்பட்டுள்ளனர்
ராஜபட்ச அரசுக்கும், திமுக அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லையென வெளிப்ப டையாகவே கருணாநிதி அறிவித்துள்ளார்
புதன்கிழமை நடைபெற உள்ள போராட்டத்தை நாங்கள் வேலை நிறுத்தம் என்கிறோம். முழுவேலை நிறுத்தத்தில் தான் கட்டாயம் உள்ளது. விரும்புகிற வர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கலாம், இது சட்டவிரோதம் இல்லை. உணர்வு பூர்வமாக நடக் கும் போராட்டத்தை, ஆட்சியை கவிழ்க்க சதி என்று கருணாநிதி கொச்சைப்படுத்தியுள்ளார். இதை அவர் தான் அரசியலாக்கப் பார்க்கிறார்
இலங்கை ராணுவமும், அரசும் தரும் பொய்த் தகவல் களை வெளியிட 3 நிருபர்கள் விலைக்கு வாங்கப்பட் டுள்ளனர். அவர்கள் பொய்யை பரப்பி வருகின்றனர்
திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளோம்
அவர் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தோம். இப்போது என் மீதே கரு ணாநிதி குற்றம் சாட்டுகிறார். இப்பிரச்னையில் இளைஞர்கள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment