சுதந்திரதினத்தையொட்டி யாழ் குடாநாட்டில் இன்று தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன
இலங்கை சுதந்திரம் அடைந்த 61 ஆம் ஆண்டு நிகழ்வையொட்டி யாழ் குடாநாட்டில் இன்று தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக யாழ் குடாநாட்டில் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டு நிகழ்வுகள் இடம் பெறவில்லை. யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் 1995ம் ஆண்டில் கைப்பற்றிய போதிலும் கூட குறிப்பாக சுதந்திரதின நிகழ்வுகளையொட்டி தேசியக் கொடி குறிப்பாக யாழ் செயலகத்திலும் மற்றும் ஒரு சில அரச திணைக்களங்களிலும் மட்டும் பறக்கவிடப்பட்டன.
இவ்வாண்டு யாழ் குடாநாட்டில் உள்ள பிரதான விதிகளில் உள்ள வீடுகளின் வாசல்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் மற்றும் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் தனியார் சிற்றூர்திகள் ஆட்டோக்கள் உட்பட தனியார் மோட்டார் சையிக்கிள்கள் சில வற்றிலும் தேசியக் கொடிகள் கட்டப்பட்டு காணப்பட்டன.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வாகனங்களின் நடமாட்டம் உட்பட பொது மக்களின் நடமாட்டமும் குறைவாகக் காணப்பட்டன. யாழ்ப்பாபணத்தில் உள்ள அரச செலகங்கள் உட்பட படையினரின் முகாம்கள் பொலிஸ் நிலையங்களிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டதுடன் அலங்கரிக்கப்பட்டும் காணப்பட்டன.
0 விமர்சனங்கள்:
Post a Comment