சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறவில்லை: பேச்சாளர்
முல்லைத்தீலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் முற்றாக வன்னியிலிருந்து வெளியேறவில்லையென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
“நேற்றையதினம் புதுமத்தாளன் பகுதியிலிருந்து நோயாளர்களை அழைத்து வருவதற்காக சில பணியாளர்கள் கப்பலில் வந்தனர். அவர்கள் மீண்டும் முல்லைத்தீவுக்குத் திரும்பிச் செல்வார்கள்” என பேச்சாளர் எமது செய்திப் பிரிவுக்குக் கூறினார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் முல்லைத்தீவிலிருந்து வெளியேறிவிட்டதாக வெளியாகியிருந்த தகவல்கள் குறித்து எமது செய்திச் சேவை அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, விடுவிக்கப்படாத பகுதிகளில் மருத்துவ சேவைகள் முடங்கியிருப்பதுடன், காயமடைந்த மக்கள் அங்கிருந்து மேலும் பல நோயாளர்கள் வெளியேற்றப்படவேண்டியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment