புலிகள் தலைவர்களின் மகன்களும், மகள்களும் ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார்கள்
பிரபாகரன் இன்னும் வன்னிப் பகுதியில் தான் இருந்து வருகிறார்; அவர் பிடிபடும் வரை அப்பாவி பொதுமக்களை மனிதக் கேடயங் களாக தொடர்ந்து பிடித்து வைத்திருப்பார் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த இரண்டு விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை பிரிவான கரும்புலிகள் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர் கடந்த மாதம் 28ம் தேதி தெருமுருகண்டி என்ற இடத்தில் ராணுவத்தின் 57வது படைப்பிரிவிடம் சரண் அடைந்தனர். இருபதுகளின் வயதில் மிகவும இளைஞர்களாக உள்ள அந்த இருவரும் "சண்டே அப்சர்வர்' என்ற பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்.
அந்த பேட்டியில் அவர்கள், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் வன்னிப் பகுதியில் தான் இருந்து வருகிறார். அவர் ராணுவத்திடம் பிடிபடும் வரை அப்பாவி மக்களை தொடர்ந்து மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருப் பார்' என்று தெரிவித்துள்ளனர்.
பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி மற்றும் புலிகளின் முக்கிய தலைவர்களான பானு, லட்சுமணன் போன்றவர்கள் தான் தற்போது புலிகள் இயக்கத்தில் உள்ள போராளிகளுக்கு கட்டளையிட்டு போரை நடத்தி வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இரணைமடு குளத்தின் கரையை குண்டு வைத்து தகர்ப்பதற்கு இந்த இரண்டு பேரும் புலிகள் இயக்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறாததை தொடர்ந்து இருவரும் ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.
குளத்தின் கரையை தகர்த்து அதன் மூலம் பேரழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் 20ம் தேதி பிரபாகரனின் மகனும், கடற்புலிகள் தலைவரான சூசையும் தங்களிடம் இதுபற்றி விளக்கி அனுப்பி வைத்ததாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் தலைவர்களின் போக்கு தங்களுக்கு பிடிக்காததால் ராணுவத்திடம் சரண் அடைய முடிவு செய்ததாக தெரிவித்துள்ள அவர்கள், ஏராளமான குழந்தைகளை விடுதலைப்புலிகள் கடத்தி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
"வாலிப வயதில் உள்ள ஏராளமான குழந்தைகளை விடுதலைப்புலிகள் கடத்தி இருக்கிறார்கள். அப்பாவி பொதுமக்களை அவர்கள் பலியாக்க நினைக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைவர்களின் மகன்களும், மகள்களும் ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார்கள்' என்றும் அந்த இருவரும் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
அப்பாவித் தமிழ் இளைஞர்கள் பலர் மூளைச் சலவை செய்யப்பட்டு அவர்கள் மனதை மாற்றி தற்கொலை படை தாக்குதல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது போர் தீவிரம் அடைந்திருப்பதால் பிரபாகரன் தனது மனைவி மற்றும் 10 வயதான இளைய மகன் பாலச்சந்திரன் ஆகிய இருவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாகவும்
0 விமர்சனங்கள்:
Post a Comment