தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்ற வரலாறு இந்திய வடமாநிலத்தவர்களுக்குத் தெரியாது
தென்காசி:ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்ற வரலாறு வடமாநிலத்தவர்களுக்கும் அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கும் தெரியவில்லை. அதை நான் டில்லியில் நடைபெறும் எங்களது கட்சி உண்ணாவிரதப் போராட்டத்தின்போது விளக்கப் போகின்றேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தென்காசியில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சரத்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்;
இலங்கைத்தமிழர் பிரச்சினைக்காக வருகிற 25 ஆம் திகதி டில்லியில் எங்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் இலங்கை பூர்வீகக் குடிகள் என்பதை விளக்கமாக பேசப்போகின்றேன்.
வடமாநில மக்களுக்கும் தலைவர்களுக்கும் அந்த வரலாறு தெரியவில்லை. வடமாநில முதல்அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையை தேசிய பிரச்சினையாகக் கருதவேண்டும் என்று அவர்களிடம் கூறப்போகிறேன்.
பிரியங்கா வந்த பிறகுதான் தாக்குதல் உக்கிரம்...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினியை பிரியங்கா சந்தித்த பிறகு தான் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். எனவே சிறையில் பிரியங்கா நளினியுடன் என்ன பேசினார் என்ற விவரத்தை வெளியிடவேண்டும்.
காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவதை, வன்முறையை நிறுத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை நிறுத்தவேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment