தமிழ் சமூகத்தை அழிப்பதற்கே பிரபாகரன் முயற்சிக்கிறார்
வன்னியிலுள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் புதிய இராணுவ தந்திரோபாயங்களை கையாளவிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்கு வழங்கப்பட்டிருந்த 48 மணித்தியால காலக்கெடு முடிவடைந்திருப்பதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு புதிய தந்திரோபாயங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
“இராணுவ நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஆனால், புதிய தந்திரோபாயங்கள் கையாளப்படும். மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றார் அமைச்சர்.
தமிழ் சமூகத்தை அழிப்பதற்கே பிரபாகரன் முயற்சிக்கிறார் என்பது புலனாகியிருப்பதாக ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பொதுமக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும், அவ்வாறு வெளியேறுவதைத் தடுப்பதற்கு நிலக்கண்ணிவெடிகளை புலிகள் புதைத்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment