யாழில் வரலாறு காணாத மக்கள் பேரணியாம்!வன்னி உறவுகளை புலிகளிடமிருந்து மீட்கசுமார் ஒரு இலட்சம் மக்கள் திரண்டனராம்!! (படங்கள்)
யாழ்.குடாநாட்டில் வரலாற காணாத மாபெரும் பேரணியாகயாழ் மக்கள் திரண்டு தங்களது உணர்வுகளை வெளிப்பத்தியிருந்தனர்.இன்று காலை யாழ் கச்சேரி முன்பாக உள்ள யாழ் கண்டி வீதியெங்கும்நீண்ட தூரத்திற்கு பேரணியாக திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அங்கிருந்துபுறப்பட்டு சென்றதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. தீவகம், தென்மராட்சி,வடமராட்சி, வலிகாமம், மற்றும் யாழ் என அனைத்து வலையங்களில் இருந்தும் வாகனங்களின் மூலம் அலை அலையாக திரண்டு வந்த மக்கள் தமது வன்னி வாழ் உறவுகள் புலிகளின் பிடியில் இருந்து சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றிருந்தனர்.யாழ் தேச மக்கள் எழுச்சி பேரவையின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட இப்பேரணி சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளிடமும், மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடமும்மகஐர்களை கையளித்திருந்தனர்.
இப்பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு யாழில் உள்ள அனைத்து பொது அமைப்புகளும் தமது பேருதவிகளை புரிந்து கொண்டதோடுபேரணியிலும் பங்கு கொண்டிருந்தனர். கொழும்பில் இருந்து 20 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் யாழ் நோக்கி சென்று பேரணி குறித்த செய்திகளை சேகரித்து கொண்டனர். இலங்கை, இந்திய, மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இதில்கலந்து கொண்டிருந்தனர். இது குறித்து யாழ் மாவட்ட தேச மக்கள் எழுச்சி பேரவைஉறுப்பினர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ஒரு நாளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், வன்னி உறவுகளை மீட்பதற்கான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment