புலிகளின் செயற்பாட்டுக்கு ஐ.நா செயலர் கண்டனம்; ஜனாதிபதிக்கு பாராட்டு
வன்னியில் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படு த்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு வலயமொன்றை அறிவித்தமையை ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.
இதேவேளை அரசாங்கம் அறிவித்துள்ளவாறு, சிவிலி யன்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனு மதிக்குமாறு ஐ. நா. செயலாளர் நாயகம் புலிகள் இயக்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஒக்காபே இதனைத் தெரிவித்துள்ளார்.
சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேறி வருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியால கால அவகாசம் வழங்கியிருந்தார். இந்தக் கால அவகாசத்திற் குள் சிலியன்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல புலிகள் இயக்கம் அனுமதிக்க வேண்டுமென செயலாளர் நாயகம் கோரியுள்ளதாக அவரின் பிரதிப் பேச்சாளர் ஒக்காபே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அறிவித்திருந்த கால அவகாசம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
இதேவேளை, கடந்த 48 மணி நேரத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 171 சிவிலியன்கள் பாதுகாப் புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
அதேநேரம், பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்ப ட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி பொது மக்கள் வருகை தந்துள்ளனரா இல்லையா என்பது தொடர்பாக தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசுவமடு பிரதேசத்தை நோக்கி நேற்றுக் காலை 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 சிவிலியன்கள் இராணுவத் தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 38 ஆண்க ளும், 25 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, முல்லைத்தீவு வலைமடு பிரதேசத்திலி ருந்து புல்மோட்டையை நோக்கி 43 சிவிலியன்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.
43 சிவிலியன்களில் 16 சிறுவர்களும், 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு சிறிய ரக படகுகள் மூலமே இவர்கள் வருகைத் தந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வவுனியா, ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி 35 குடும்பங்களைச் சேர்ந்த 65 சிவி லியன்கள் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான நேரத்திற்குள் வருகை தந்துள்ளனர்.
இந்த 65 சிலியன்களில் 12 சிறுமிகள், 10 சிறுவர்கள், 34 பெண்கள் மற்றும் 9 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment