'டாவின்சி'
உலகத்திலேயே மிகப் புகழ் பெற்ற ஓவியம் மோனாலிசா. விலை மதிப்பிட முடியாத இந்த ஓவியத்தை வரைந்து அழியாப் புகழ்பெற்றவர் லியானார்டொ டாவின்சி.
இவர் ஓவியர் மட்டுமல்ல சிற்பி, கட்டடக் கலை நிபுணர், இசைக்கலைஞர், ஆராய்ச்சியாளர், வான இயல் அறிஞர், இயந்திரப் பொறியாளர்- இப்படிப் பல துறைகளில் வித்தகர்.
இத்தாலி நாட்டில் உள்ள வின்சி என்ற சிற்றூரில் 1452ல் டாவின்சி பிறந்தார். தந்தை வழக்கறிஞர், தாயார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
டாவின்சி, குழந்தையாக இருக்கும்போதே தாயார் காலமாகிவிட்டார், அதன்பின் சிற்றன்னையின் ஆதரவில் வளர்ந்தார்.
சிறுவனாக இருக்கும் போதே ஓவியங்கள் வரைவதில் திறமை பெற்று விளங்கினார். டாவின்சி வரைந்த ஓவியங்களை அவர் தந்தை பாராட்டியதுடன், ஓவியக் கலைஞர் ஒருவரின் உதவியாளராகச் சேர்ந்து விட்டார்.
டாவின்சி, பல அருமையான படங்களை வரைந்தார். அவற்றைப் பார்த்து, அவருடைய ஆசிரியரே அசந்து போனார்.
30வது வயதில் மிலான் நகருக்குச் சென்றார். அங்கு ஒரு பிரபுவின் ஆஸ்தான ஓவியராகத் திகழ்ந்து, பல ஓவியங்களை வரைந்தார்.
பின்னர் பிளாரன்ஸ், வெனிஸ்ரோம், நகரங்களில் வாழ்ந்தார். பிளாரன்ஸ் நகரில் இருக்கும் போதுதான், மோனாலிசா ஓவியத்தை வரைந்தார். மோனாலிசா ஓவியத்துடன் ஏசுகிறிஸ்துவை அவர் அன்னை தூக்கிக் கொண்டிருப்பது போன்ற ஓவியம், மிலான் தேவாலய சுவரில் வரைந்த ஏசுவின் கடைசி விருந்து என்ற ஓவியம் ஆகியவையும் உலகப் புகழ்பெற்றவை.
ஏசுவின் கடைசி விருந்து ஓவியத்தை வரைய 10 ஆண்டுகள் பிடித்தன.
டாவின்சியின் புகழ், இத்தாலிக்கு வெளியேயும் பரவியது. 1516ல் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸ், இவரைத் தன் நாட்டில் வந்து வசிக்குமாறு அழைத்தார். அதை ஏற்று டாவின்சி பிரான்சு நாட்டுக்குச் சென்றார். அவர் வசிப்பதற்கு, அழகிய மாளிகை ஒன்றை மன்னர் வழங்கினார். அங்கு தங்கியிருந்து ஓவியங்களை வரைந்தார், சிற்பங்களை வடித்தார். இவர் இடது கைப்பழக்கம் உள்ளவர். பல நகரங்களை அமைப்பதற்கு, ஓவியங்களை (பிளான்) வரைந்து கொடுத்தார்.
டாவின்சி, 1519ம் ஆண்டில் தனது ‘67வது வயதில் காலமானார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment