ஒஸ்கார் விருதுகளை அள்ளிய ஸ்லம்டோக் மில்லியனர் கதை
ஆஸ்கார் விருதுகளை அள்ளி குவித்த ‘ஸ்லம்டோக் மில்லியனர்’ படத்தின் கதை இந்திய எழுத்தாளர் விகாஸ் கவரூப் 2005இல் எழுதிய நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. மும்பை குடிசையில் பிறந்து வளர்ந்த இளைஞன் டெலிவிஷனில் நடத்தப்பட்ட குரோர்பதி நிகழ்ச்சியில் வென்று கோடீஸ்வரர் ஆவதேகரு.
மும்பை தாராவி குடிசைப் பகுதியில் பிறந்து வளரும் ஏழை சகோதரர்கள் ஜமால் மாலிக், சலீம். இவர்களின் பெண் தோழி லத்திகா. இந்து-முஸ்லிம் கலவரத்தில் குடிசைகள் எரிக்கப்படுகின்றது. ஜமால் தாய் கொல்லப்படுகிறார்.
அநாதையாகும் மூவரும் மமன் என்ற தாதாவிடம் சிக்குகின்றனர். மமன் கொடூரமானவன் ஆதரவற்ற சிறுவர்களை கடத்தி சித்திரவதை செய்து பிச்சை எடுக்க வைப்பவன். ஜமால் சகோதரர்களையும் அதில் ஈடுபடுத்துகிறார். ஒரு கட்டத்தில் மூன்று குழந்தைகளும் தாதாவிடம் இருந்து தப்பி ஓடுகின்றனர். ஜமால் மாலிக்கும் சலீமும் ரயிலில் ஏறி விடுகிறார்கள். ஆனால் லத்திகா தாதா கும்பலிடம் மீண்டும் மாட்டிக்கொள்கிறாள்.
ஜமாலும், சலீமும் கால் போனபடி ஊர் ஊராக செல்கின்றனர். தாஜ்மஹால் பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிக்கின்றனர்.
வருடங்கள் ஓடுகின்றன. சலீம் சொந்த ஊருக்கு திரும்பி லத்திகாவை சந்திக்க ஆசைப்படுகிறான். சகோதரர்கள் மும்பைக்கு வருகிறார்கள். அங்கே லத்திகா விலைமாதுவாகி நட்சத்திர ஹோட்டல்களில் நடனமாடுவதை பார்த்து அதிர்கின்றனர். அவள் வாழ்வை சீரழித்த தாதா மமனை சலீம் கொல்கிறான்.
லத்திகாவையும் அடைய துடிக்கிறான். இதை ஜமால் எதிர்க்க சகோதரன் என்றும் பாராமல் அவனை கொன்று விடுவதாக மிரட்டுகிறான். லத்திகா தலையிட்டு தடுக்கிறார்.
இந்த மோதலுக்கு பின் ஜமால், சலீம் பிரிகின்றனர். ஜமால் ஹோட்டல் வேலையில் சேருகிறான். அவன் வாழ்க்கை திசை மாறுகிறது. லத்திகா டெலிவிஷனில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பது உண்டு.
இதனால் அதில் பங்கேற்கிறான். அனில்குமார் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்கிறான். கடைசி ஒரு கேள்வி பாக்கி இருக்கும் நிலையில் மோசடி செய்து பதில் அளிப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸ் நிலையத்துக்கு தூக்கிப் போய் துன்புறுத்தி விசாரிக்கின்றனர். வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களில் இருந்து பதில் கிடைத்ததாக விளக்கம் சொல்கிறான். அவன் மேல் நம்பிக்கை ஏற்பட்டு பொலிஸார் விடுவிக்கின்றனர்.
கடைசிக் கேள்வியானது கிளைமாக்சின் இதய துடிப்பை எகிற செய்கிறது. அந்த கேள்விக்கு ஜமாலால் பதில் சொல்ல முடியவில்லை. டெலிபோன் செய்து லத்திகாவிடம் கேட்க முயற்சிக்கிறான். இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அவன் ஜெயிப்பதற்காக நாடே பிரார்த்திக்கிறது. இறுதியில் வென்று ரூ. 2 கோடியை பெற்று லத்திகாவுடன் சேர்வது போல் கதை முடிகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment