வன்னி மக்கள் ஐசிஆர்சியின் துணையுடன் வெளியேற புலிகளின் தலைவர் பிரபாகரன் அனுமதிக்க வேண்டும் : ஆயர்கள் கோரிக்கை
வன்னியில் மனிதப் பேரவலத்துள் சிக்குண்டுள்ள மக்களை ஐசிஆர்சியின் வழித்துணையுடன் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென நான்கு ஆயர்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக யாழ் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான யுத்தம் இருதரப்பிற்கும் மூண்டுள்ள நிலையில் ஏற்கனவே மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் இதில் 3 மடங்கிற்கும் அதிகமான மக்கள் காயம் அடைந்தும் உள்ள நிலையில் வன்னி மக்கள் பூண்டோடு அழிய இடம்கொடுக்க மாட்டீர்களென புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் விநயமாக கேட்பதாக நான்கு ஆயர்கள் எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வணக்கத்திற்குரிய ஆயர்கள் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார், ராயப்பு ஜோசப் அடிகளார், கிங்சிலி சுவாம்பிள்ளை அடிகளார், பொன்னையா அடிகளார் ஆகியோர் இந்த வேண்டுகோள் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment