யாழ்ப்பாணம் நகரில் ஆபாச திரைப்படங்களை காண்பித்து வந்த மினி தியேட்டர் உரிமையாளர் கைது!
யாழ்ப்பாணம் நகரில் ஆபாச திரைப்படங்களை காண்பித்து வந்த மினி தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் 14 ஆபாச இறுவட்டுக்கள், உபகரணங்கள் என்பவற்றையும் பொலீசார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்து}ரியார் வீதியில் ஆபாசப்படங்களை திரையிட்டு வந்த மினித் தியேட்டருக்குள் திடீரெனப் புகுந்த சுன்னாகம் பொலீசார் உரிமையாளரைக் கைது செய்ததுடன் ஆபாசப் படங்களை பார்த்தவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர். யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின்பேரில் சுன்னாகம் பிரதம பொலீஸ் பரிசோதகர் தலைமையிலான பொலீசாரே மேற்படி திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டதுடன், மேலும் சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தியேட்டர் உரிமையாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment