தொப்பிகலையை மீட்ட மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய புதையல் தோண்டும் போது சிக்கினார்
வெலிவேரிய பிரதேசத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கோஷ்டி ஒன்றினைச் சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவர்களைப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
வெலிவேரிய பொலிசார் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்தப் புதையல் தோண்டும் கோஷ்டியின் தலைவராகச் செயற்பட்டவர் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த (07) இரவு முழுவதும் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய உட்பட அனைவரும்; இன்று (08) நீதவான்; முன்னிலையில்; ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர லங்கா ஈ நியூஸ{க்குத் தெரிவித்தார்.
ரணவிரு விருது பெற்ற மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய கிழக்கு மாகாணத்தில் தொப்பிகலை பிரதேசத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் இராணுவ நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment