அரசியல் தீர்வை முன்வைக்கும் காலம்: மஹிந்தவிடம், முஹர்ஜி
உறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான காலம் கனிந்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்திக் கூறியதாகத் தெரியவருகிறது.
நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படும் எனவும், 13வது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதிகாரங்களைப் பகிரத் தயார் எனவும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தன இந்திய வெளிவிவகார அமைச்சரிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் உறுதியளித்திருந்தார்.
தற்பொழுது தோன்றியிருக்கும் நல்ல சந்தர்ப்பத்தில் ஏற்கனவே உறுதியளித்தபடி தீர்வொன்றை முன்வைக்குமாறு முஹர்ஜி, மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்ததுடன், மோதல்களால் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்திய மஹிந்த ராஜபக்ஷ, 13வது திருத்தச்சட்டமூலத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தயாரெனக் கூறியிருந்தார்.
இதற்கமைய, அரசியல் தீர்வொன்றை முன்வைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் தோன்றியிருப்பதாக அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment