அத்திலாந்திக் சமுத்திரத்தை நீந்தி கடந்த உலகின் முதல் பெண்
அத்திலாந்திக் சமுத்திரத்தை நீந்திக் கடந்த முதலாவது பெண் என்ற சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் பிக்ஜி (Jennifer Figge) என்ற 56 வயது பெண்மணி நிலைநாட்டியுள்ளார்.
கேப் வெர்டே தீவுகளிலிருந்து ஆபிரிக்காவின் ட்ரினிடாட்டிற்கு (Trinidad) 24 நாட்கள் நீந்தி இந்தச் சாதனையை அவர் நிறைவேற்றியுள்ளார்.
சமுத்திரத்திலுள்ள ஆபத்து மிக்க சுறாக்களிட மிருந்து தப்பித்துக் கொள்ளும் முகமாக, தன்னைச் சுற்றிக் கூண்டு போன்ற அமைப்பை உருவாக்கி அவர் நீந்தியதாகக் கூறப்படுகிறது.
ஜெனிபர், தற்போது ட்ரினிடாட்டிலிருந்து (Trinidad) பிரித்தானிய வேர்ஜின் தீவுகளுக்கு நீந்தத் திட்டமிட்டுள்ளார்.
தனது சாதனை குறித்து ஜெனிபர் விபரிக்கையில், தான் சிறுமியாக இருக்கும் போதே அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடக்க வேண்டும் என்று கனவு கண்டதாகக் கூறினார்.
தினசரி 8 மணித்தியாலங்கள் சமுத்திரத்தில் நீந்திய ஜெனிபர், ஏனைய நேரத்தை அவருக்கு உதவியாகப் பயணித்த படகில் கழித்துள்ளார்.
தனது சாதனை முயற்சியின்போது சமுத்திர நீரில் திமிங்கிலங்கள், ஆமைகள் போன்றவற்றை அவதானித்த போதும், சுறாக்கள் எதனையும் காண நேரவில்லை என ஜெனிபர் கூறினார்.
அவர் 3380 கிலோ மீற்றர் நீந்தி பஹாமாஸை (Bahamas) அடைய ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த போதும், 9 மீற்றர் உயரமான பாரிய கடல் அலைகளை எதிர்நோக்க நேர்ந்ததால், அவர் தனது திட்டத்தைக் கைவிட்டு ட்ரினிடாட்டில் (Trinidad) தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment