இரு வளர்ப்பு நாய்களால் கடித்து குதறப்பட்டு பச்சிளம் பாலகன் பலி
மூன்றரை மாத வயதுடைய பச்சிளம் பாலகன் ஒருவன் இரு வளர்ப்பு நாய்களால் கடித்துக் குதறப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பிரித்தானியாவில் சனிக்கிழமைஇடம்பெற்றுள்ளது.
ஜாடென் மக் (Jaden Mack) என்ற இந்தப் பாலகன், தனது பாட்டியாருடன் வீட்டில் தனித்திருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யஸ்ராட் மைனாச் (Ystrad Mynach) எனும் இடத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து, பாலகன் 12 மைல் தொலைவிலுள்ள பிரின்ஸ் சாள்ஸ் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டான்.
எனினும், சிகிச்பையனளிக்காத நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
செல்லப் பிராணிகளுடன் தமது சின்னஞ்சிறு குழந்தைகள் பழகுவதற்கு இடமளிக்கும் பெற்றோ ருக்கு இது ஓர் எச்சரிக்கையாக உள்ளது என பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி ஜிம் பேக்கர் (Jim Baker) தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment