சுதந்திரபுரத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 17 பேர் பலி, 45 பேர் காயம்
முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமடு வடக்கில் அமைந்துள்ள சுதந்திரபுரம் பகுதியிலுள்ள முகாமில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதுடன், 45 பேர் காயமடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த சுதந்திரபுரம் முகாமிலிருந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்கவைத்ததாகவும், இந்தச் சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
எனினும், இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லையெனவும், மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment