மடையர் கைகளில் கிழக்கு மாகாண சபை: மாற்றியமைப்பேன் என கருணா சூளுரை
இன்னும் சில வாரங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் இணையவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) லங்கா ஈ நியூஸ{க்குத் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தற்போது பேச்சுவாhத்;தை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லங்கா ஈ நியூஸ் அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது மேலும் தெரிவித்தாவது,
புதிது புதிதாகக் கட்சிகளை ஆரம்பிப்பதனை விட தேசியக் கடக்சி ஒன்றுடன் இணைந்து செயற்படுவதே மேல். அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய முடியும். அதற்குப் பொருத்தமானதொரு கட்சிதான் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாம் இணைவதன் மூலம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி அரசாங்கத்தின் மூலம் கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றி அதனைச் சரியான வழிக்குக் கொண்டு வரும்; எனது முயற்சியும் பயனளிக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் கல்வி மற்றும் தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது இன்றைய அவசரத் தேவையாகவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் வரையிலுள்ள எனது அனைத்து அலுவலகங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள 60 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வர்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமற்றவரென தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாகக் கேட்டபோது, கிழக்கு மாகாணம் என்பது புத்தி ஜீவிகள் நிறைந்த மாகாணமாகும். இதன் காரணமாக இந்த மாகாண சபையைப் புத்தி ஜீவிகள் நிறைந்த மாகாண சபையாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மடையர்களிடம் ஒப்படைக்கப்படுவதனை நாம் அனுமதிக்க முடியாது. இதன் காரணமாகத்தான் முதலமைச்சர் பதவிக்குப் பிள்ளையான் தகுதியற்றவரெனக் கூறினேன்.
கல்வியறிவு இல்லாதவர்களையும் மடையர்களையும் கொண்டு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. கிழக்கு மாகாணம் இந்த நிலைக்கு வருவதற்குக் காரணம் யார் என்பது சர்வதேசத்துக்குத் தெரியும்.
இன்னும் சில தினங்களில் அமைச்சுப் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. இது உண்மையா எனக் கேட்டபோது,
ஆம,; அதில் உண்மை இருக்கிறது. இது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார். இன்னும் சில தினங்களுக்குள் அமைச்சுப் பதவி சாத்தியப்படும் என அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment