ஒரு நாட்டிற்குள் இரண்டு ராணுவங்கள் இருக்கமுடியாது
நேற்றுமுந்தினம் (07.02.2009) நோர்வேஜிய தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த திரு எரிக் சோல்கைம் தனது கூற்றில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அரசியல்தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும் அதுவே அவர்களுக்கு நல்லது என்றார்.
உலகத்திலேயே அனைத்துப்படைகளையும் கொண்டுள்ள விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்றும் ஒரு நாட்டிற்குள் இரு இராணுவங்கள் இருக்கமுடியாதென்றும் கூறியுள்ளார்.
இன்றைய நிலையில் தான் இந்த அறிவுறுத்தலைத்தான் கூறமுடியும் என்று கூறியுள்ளார். மேலும் இதுவே தமிழ்மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
0 விமர்சனங்கள்:
Post a Comment