முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையான் பொருத்தமில்லை
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையான் பொருத்தமானவர் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளீதரன் கூறியுள்ளார்.
தமது பணிகளைச் சரியாக முன்னெடுக்கக் கூடிய திறமை பிள்ளையானுக்கு இல்லையென கருணா அம்மான் வோல் ஸ்ரீட் ஜேர்னலுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அநாகரீகமான முறையில் நடந்துகொள்வதுடன், அவர்களுக்கு உளவளச்சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என அம்மான் கூறினார்.
திறமையானவர்களே பதவிக்குத் தேவை. பிள்ளையானுக்குத் திறமை இல்லாதததால் அவரால் சமாளிக்க முடியாதுள்ளது என கருணா அம்மான் வோல் ஸ்ரீட் ஜேர்னலுக்கு வழங்கி செவ்வியில் தெரிவித்தார்.
அதேநேரம், கருணா அம்மான் தனது உறுப்பினர்களை இக்கட்டான சூழ்நிலையில் விட்டுச் சென்றதாக பிள்ளையான் அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாதவகையில் மத்திய அரசாங்கம் தனது கைகளைக் கட்டிப்போட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment